Free Hepatitis B Vaccination for TN Medical Students
தமிழ்நாடு அரசு
சுருக்கம்
மருத்துவக்கல்வி - 2000-2001 ஆம் ஆண்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு 3 முறை மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி (HEPATITIS ‘B’Vaccine) இலவசமாக போடுதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
அரசாணை (நிலை) எண் .301 நாள்: 21.8.2000
படிக்க:-
மருத்துவக்கல்வி இயக்குநரின் கடித எண் 32682/ம2/2000 நாள் 27.4.2000
ஆணை:-
தமிழ்நாடு மருத்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் பணிசாரா பட்ட/பட்டய மேற்படிப்பு மாணவர்கள் சங்கம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி (HEPATITIS ‘B’Vaccine ) இலவசமாக வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்கள்.
2. இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநருடன் கலந்து ஆலோசித்ததில் மருத்துவக்கல்வி இயக்குநர், அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு தோராயமாக 1115 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்றும், மேற்படி மாணவர்களுக்கு 3 முறைகள் முதலாமாண்டில் ஹெப்படிடிஸ் பி வாக்சின் (HEPATITIS ‘B’Vaccine ) வழங்கப்பட வேண்டும் எனவும், 1115 மாணவர்களுக்கு 3 முறை ரூ.160 வீதம் ஹெப்படிடிஸ் பி வாக்சின் வழங்குவதற்கு விற்பனை வரி உட்பட தோராயமாக ரூ. 6,00,000/- (ரூபாய் ஆறு இலட்சம் மட்டும்) செலவு ஆகும் என தெரிவித்து செயற்குறிப்பொன்றை அரசுக்கு அனுப்பி உள்ளார். இச்செயற்குறிப்பினை ஏற்று இதற்கு 2210 மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் தலைப்பின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மருத்துவக்கல்வி இயக்குநர் கேட்டுள்ளார்.
3. மருத்துவக்கல்வி இயக்குநரின் செயற்குறிப்பினைஅரசு ஆய்வு செய்து,
2000-2001 ஆம் ஆண்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு 3 (மூன்று) முறை மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி (HEPATITIS ‘B’Vaccine) இலவசமாக போடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. மேலும் இதற்காக ஆகும் செலவுத்தொகையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருந்து வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பத்து சதவீதம் (Reserve) தொகையிலிருந்து செலவு செய்ய வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிற
4. இவ்வரசாணை நிதித்துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. (நிதித்துறை அலுவல் சார்பற்ற எண் 55218/சுகா,2/2000-1 நாள் 25.7.2000)
( ஆளுநரின் ஆணைப்படி )
எல்.கே.திரிபாதி
அரசுச்செயலாளர்
பெறுநர்
மருத்துவக்கல்வி இயக்குநர், சென்னை-10.
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர், சென்னை-5
மாநிலக்கணக்காயர், சென்னை-18/5
கருவூலக்கணக்கு இயக்குநர், சென்னை-35.
பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம்,
சென்னை-32.
நகல்:-
முதலமைச்சரின் செயலர், சென்னை-9
மக்கள் நல்வாழ்வு மற்றும் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர்,
சென்னை-9
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் ( அ.ந.மு.பிரிவு 2/இம1/இம2) துறை,
சென்னை-9
நிதித்துறை, சென்னை-9.
//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
No comments:
Post a Comment